பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்டின் 81 அச்சத்தைப் போக்கித் தனக்குத் தாரகனாகவும் இருக் கின்றான் என்பது ஆழ்வாரது நம்பிக்கை. படைப்பு முதலான முத்தொழில்களையும் நடைபெறச் செய்பவன் என்ற கருத்து இன்னொரு பாசுரத்திலும் வற்புறுத்தப்பெறு கின்றது.

  • படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம

பரம்பரன் சிவபிரான் அவனே இடைப்புக்குஓர் உருவும் ஒழிவில்லை அவனே புகழ்வில்லை யாவையும் தானே' (கெடுப்பு-அழித்தல்; பரம்பரன்-உயர்வுக்கும் அப்பாற் :பட்டவன் இடைப்புக்கும்-படைப்புக்கும் கெடுப்புக்கும் இடையில் புகுந்து; ஓர்உருவும் ஒழிவில்லை. எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாக இருப்பவன், புகழ்வு. புனைந்துரை) ஆக்கல், அழித்தல், அளித்தல் இவையெல்லாம் தான் ساتا (يَنَ வழக்காக இருப்பவன்; எல்லாப் பொருள்களையும் உடலாகக் கொண்டு தான் ஆன்மாவாக இருப்பவன். சேதநம் அசேதநம் என்ற வேறுபாடு இன்றி எல்லாம் அவனுக்கு உரிமையாகும். இவை யாவும் புனைந்துரையன்று, உண்மையே என்கிறார் ஆழ்வார். திருச்சிற்றாற்று எம்பெருமானது பெருமைகளை இன்னும் பலவாறாகப் பேசி இனியராகின்றார் குருகூர் வள்ளல். - 'பெரியமூ உலகும் நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த குறியமான் எம்மான் குரைக் கடல் கடைந்த கோலமா னிக்கம்என் அம்மான்’’** 23. திருவாய் 8, 4: 9. 24. ഒു. 8്. 4:4. —6