பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H08 மலைநாட்டுத் திருப்பதிகள் அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய, மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே' (உற்றவர் உறவுமுறையார்: பந்தம் - தளை; நொந்து - வருந்தி; வல்லையாய் - வல்லமையுடையாய்; மருவு - பொருந்து.) என்ற பாசுரத்தை நினைக்கின்றோம். சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும், மேலாத் தாய் தந்தையும் அவரே இனியாவாரே' என்றவாறு எல்லா உறவு முறை களும் திருமகள் கொழுநனே என்று கொண்டிருப்பதே முறை. அங்கனம் கொள்ளாது, “அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவர் குழலான் என்று மயங்கி' இன்னமும் பொய்யான பந்துக்களிடத்தில் பற்று வைத்து இவ்வுலக வாழ்வு போதும் போதும் என்று வெறுத்துத் திருவல்லவாழ் பதியை வாயால் சொல்லுவதற்காகிலும் இசையுமாறு நெஞ்சினை வேண்டுகின்றார் ஆழ்வார். இவ்வுலக வாழ்விற்குத் தொடக்கத் தளையாயிருப்பது மகளிரைத் தொடர்பாகவுள்ள சிற்றின்பம். அதனை முதலில் களையவேண்டும் என்று மூன்று பாசுரங்களில் நினைவூட்டு கின்றார். மின்னல் கொடியையும் வஞ்சிக் கொம்பையும் தோற்கும்படி செய்யவல்ல நுண்ணிய இடையையுடிையவர் கள் மகளிர்; அன்னநடை பயிலும் மெல்லியலார் அவர்கள்." மேலும், ஆடவர்களைச் செயற்கை யழகினால் மயக்கு வதற்குப் பலவகை அணிகளைப் பூண்டு பல்வேறு ஆடை 5. பெரி. திரு 9.7; 1; 1.9 1 பாசுரத்தையும் காண்க. 6. திருவாய். 5.1:8 7. பெரி. திரு 9.7:2.