பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு பல்லவி எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! (ஒ-எத்தனை) சரணங்கள் சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய் அத்தனை புலகமும் வண்ணக் களஞ்சிய மாகப் பலப்பல நல் அழகுகள் சமைத்தாய் (ஒ-எத்தனை) முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையு முணரும் உணர்வமைத்தாய் பக்தியென் றொருநிலை வகுத் தாய்-எங்கள் பரமா பரமா! பரமா! (ஒ-எத்தனை) எம்பெருமான் ஏழுமலையானின் அளவற்ற கருணை யால் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருகின்றது. இப்பதிப்பின் முன்பக்கத்து மேலட்டையில் திருவனந்தபுரம் அனந்தசயனத்து எம்பெருமான் சேவை சாதிக்கின்றான். நூலில் ஆங்காங்கு சில திருத்தங்கள் செய்துள்ளேன். பெரியார் எழுத்தில் இப்பதிப்பு வெளி வருகின்றது. . கண்ணன்திருவடி எண்ணுக மனமே திண்ணம் அழியா வண்ணம் தருமே” வேங்கடம்’ AD-13 (பிளாட் 3354) ந. சுப்பு ரெட்டியார் அண்ணா நகர் சென்னை-600040 10-5-1988 9. பா.க. தோ.பா. இறைவா! இறைவா! 10. பா.க. தோ.பா. கண்ணன் திருவடி-1