பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாது வருஷப் பஞ்சம் தாது வருஷப் பஞ்சத்திலே - ஒ சாமியே காய்வேறே பிள்ளேவேறே - ஒ சாமியே அறுபது வருசம் போயி - ஒ சாமியே அடுத்தாப் போலே காதுதானே ஒ சாமியே தைப் பொங்கல் காலத்திலே - ஒ சாமியே தயிருக்கும் பஞ்சம் வந்ததே - ஒ சாமியே மாசி மாகத் துவக்கத்திலே - ஒ சாயியே மாடுகளும் பட்டினியே ஒ சாமியே பங்குனிக் கடைசியிலே - ஒ சாமியே பால் மாடெல்லாம் செத்துப் போச்சே ஒ சாயியே 5 சித்திரை மாதத் துவக்கத்திலே - ஒ சாமியே சீரெல்லாம் குலைந்து போச்சே - ஒ சாமியே வைகாசி மாதத்திலேதான் ஒ சாமியே வயிறு எல்லாம் ஒட்டிப் போச்சே - ஒ சாமியே ஆனி மாதத் துவக்கத்திலே - ஒ சாமியே ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஒ சாமியே ஆடி மாதத் துவக்கத்திலே - ஒ சாமியே ஆளுக் கெல்லாம் ஆட்ட மாச்சே - ஒ சாமியே ஆவணி மாசத் துவக்கத்திலே - ஒ சாமியே ஆட்டம் கின்று ஒட்டமாச்சே - ஒ சாமியே 10 புரட்டாசிக் கடைசியிலே - ஒ சாமியே புரண்டுதே உலகம் பூரா - ஒ சாமியே ஐப்பசித் துவக்கத்திலே - ஒ சாமியே அழுகையுங்கண் ணிருந்தானே - ஒ சாமியே கார்த்திகைக் கடைசியிலே - ஒ சாமியே கண்ட இடம் எல்லாம் பிணம் - ஒ சாமியே மகாராணி புண்ணியத்திலே - ஒ சாமியே மார்கழிப் பஞ்சம் கின்றதே - ஒ சாமியே காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாயியே வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஒ சாமியே . . . 15 ரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஒசாமியே மேட்டுப் பக்கம் சாறு பிணம் - ஓ சாயியே