பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆராய்ச்சி உரை ஆக்க வாணும் அரிக்க வாணும்.சுண்டெலிப் பெண்ணே அறிவிருந்தால் போதுமடி'-சுண்டெலிப் பெண்ணே என்று தொடங்குகிறது இந்த அறிவுரை. பெண் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டுமென்பதைப் பல படியாகச் சொல்லிக் காட்டுகிருள், உபதேசம் செய்யும் தாய். 'அக்கம்பக்கம் போகாதே; கண்ணடிக்கிறவனையும் கடைக்குப் போகிறவனையும் பாராதே" என்கிருள். பல பல நீதிகளே அவள் சொல்கிருள். எவற்றைச் செய்யக்கூடாது என்று வரிசையாகச் சொல்லிவிட்டு எவற்றைச் செய்யவேண்டுமென்று பின்பு கூறுகிருள். காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போட்டுச் சட்டி பானையைக் கழுவி வைத்துப் பாத்திரங்களே விளக்கி வைக்க வேண்டும். வெள்ளி செவ்வாயில் வீடு முழுவதும் மெழுக வேண்டும். ஆடி அமாவாசையில் ஆண்டவனேக் கும்பிட வேண்டும். கிழிந்து போன கந்தலைக்கூட எறிந்து விடாமல் தைக்க வேண்டும். கடவுளேக் கும்பிட வேண்டும். தர்மம் செய்ய வேண்டும்-இப்படிப் பல உபதேசங்களே அவள் உரைக்கிருள். இறுதியில், - - காராம் பசுவைப் போலேநி கடவுளுக்கு உகந்து நட” என்று முடிக்கிருள். இதன்பின் வரும் மாமியாள் மருமகள் சண்டை மிகவும் இழி வான முறையில் இருக்கிறது. திட்டும் வசவும் மிகுதி. முதலில் மாமியாள் மருமகளே மிரட்டி உருட்டி வைது தாக்குகிருள். இறுதியில் மருமகள் திருப்பிக் கொள்கிருள். கடைசியில் மாமி யாள் கெஞ்சிப் பணிந்து போகிருள். i or 8. தாலாட்டு இந்தப் பகுதியில் முதலில் குழந்தையைத் தாய் தாலாட்டும் பாடல்கள் சில உள்ளன. அப்பால் தாலாட்டு என்ற சட்டத்துக் குள்ளே வெவ்வேறு பொருளைப் புகுத்திக் கூறும் அமைப்பைக் $fffffffff G\}ff {f}. . . . . . . . . . ' ' ' , ஆர் அடித்தார்' என்ற முதற் பகுதியில் உண்மையான குழந்தை இருக்கிறது; கவிச் சுவையும் இருக்கிறது. . 1. ப. 201:1. . . . . . . 2. ப. 208 : 65, ! ; : -