பக்கம்:மலையாள இலக்கண வரலாறு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613 005 - இந்தியா முனைவர் கதிர். மகாதேவன் துணைவேந்தர் அணிந்துரை மலையாள இலக்கண வரலாறு: அம்கிமாழியின் இலக்கிய வளர்ச்சி மாற்றத்தால் பல் கட்டங்களில் மாறுதல் செய்யவேண்டிய சூழல்கள் தோன்றின. வட மொழியின் ஆதிக்கம் மலையாள மொழியில் குடிகொண்ட காலங்களில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம். மலையாள இலக்கிய வரலாற்றில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் 'கதகளி' என்னும் நாட்டிய நாடகங்கள் செல்வாக்கு பெற்றன. கதகளி நாட்டிய நாடகத்திற்கு இதிகாசங்கள் கருவாக அமைந்தன. இந்நிலையில்தான் வடமொழியைப் பழைய மலையாளத்தில் புகுத்தினர். இந்நிலையே மணிப்பிரவாள நடை. அமைய வழி வகுத்தது. மலையாள மொழிக்கவிஞர் அனைவரும் மணிப்பிரலான நடையில் 'கதகளி' நாட்டியத்திற்குப் பாடல்கள் இயற்றினர். இத்தகைய நாடகங்கள் இன்றும் 'கண்ட காவியங்கள்' என்றும், 'திருச்திய காவியங்கள்' என்றும், 'சிராவிய காவியங்கள்' என்றும் பெயர் பெற்றன. மணிப்பிரவாள நடையில் எழுதாத கவிஞர்கள் அரைக் கவிஞர்கள் என்றும் குறைக் கவிஞர்கள் என்றும் குறை கூறினர். மணிப்பிரவாள நடைக்கு ஏற்றவாறு மலையாளத்தில் இலக்கணங்கள் அமைக்கப் புலவர்கள் தலைப்பட்டனர். நாடக கால இந்நிலை உருவாவதற்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் எழுத்தால் மலையாளமாகவும், படித்தால் நல்ல தமிழாகவும் காணப்பட்டன. இதற்கு 'இராமகதை' என்ற நூல் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மலையாள வரலாற்றுக் காலகட்டத்தில் இராமகதைக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்கள் தமிழாக உள்ளன.