உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள் பாண்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


உடனிருந்து புகைப்படம் எடுத்து உதவிய செல்வன் மெய்கண்டான் தொண்டினையும் ஈண்டுக் குறிப்பிட வேண்டும்.

இந் நூலுக்கு முன்னுரை தந்து சிறப்பித்த தமிழக முதலமைச்சர் உயர்திரு. அறிஞர் அண்ணா அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

திருவேங்கடவன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்த ரும், 'தென்மொழிப் புத்தக டிரஸ்டின்' தலைவருமாகிய உயர்திரு.S.கோவிந்தராசுலு நாயுடு அவர்கள் ஆய்வுடன் கூடிய ஆங்கில முன்னுரை தந்து உதவியுள்ளார்கள். அவர்கட்கும் கட்டுப்பாடுடையேன்.

இந்நூலை விரும்பி ஏற்றுக் குறைந்த நாளில் மிக அழகாக அச்சிட்டுத் தந்த மாணிக்கம் அச்சகத்தாருக்கும், உள்ளே உள்ள படங்களையும் அட்டைக்குரிய படத்தையும் ஒரு சில நாட்களில் மகிழ்வோடு அழகுறச் செய்து உதவிய நண்பர் 'அய்க்கன்' என்னும் திரு. அய்யாக் கண்ணு அவர்களுக்கும், நூல் வெளிவர எல்லா வகையிலும் உடனிருந்தும் பிழைகளை ஒப்புநோக்கித் திருத்தியும் உதவிய பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர் திரு.சி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி உரியன. இப்பணி வெற்றி பெற்று முடிய உதவிய எல்லா அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு தமிழன்னையின் பாதப்போதுகளில் இம்மலரை இட்டு வணங்குகின்றேன்.

தமிழ்க்கலை இல்லம் - அ. மு. பரமசிவானந்தம்
சென்னை-30,15-6-67.