உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பூங்குன்றன் தான் பூங்குன்றத்திற்குச் சொந்தக்காரன் என்பதை அடையாளம் காட்டிக்கொண்டதைப் போன்றதாகும். அந்த உணர்வின் காரணமாகத்தான் சிங்கப்பூரில் கூட Speak Manda- rin என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மொழி என்பது உள்ளங்களோடு உறவாட, தொடர்பு கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்பது மொழி ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் உணர்ந்த ஒரு உண்மை. மொழி ஒன்றுதான் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் பொதுவானது. நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்ற இந்த மூன்று காலங்களுக்கும் தொடர்புடையது மொழிதான். நமது தமிழ் மொழியைப் பொறுத்தவரை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தோன்றியது என்ற வரலாற்றுப் பெருமை கொண்டது. தொல்காப்பியத்தின் கால கட்டம் 3000 ஆண்டுகள் என்றாலுங்கூட அதற்கு முன்பே தமிழ இலக்கியங்கள் தோன்றிவிட்டன என்றே சொல்லவேண்டும். எப்போதும் ஒரு மொழி உருவான பிறகுதான் அந்த மொழி சார்ந்த இலக்கியங்கள் அங்கொன்றும், இங்கொன் றுமாக தோன்றிய பிறகுதான் இலக்கணம் அதற்காக வகுக்கப்படும். அப்படித்தான் 3000 ஆண்டு காலத்தைக் கொண்ட தொல்காப்பிய இலக்கணம் வரையப்பட்டிருந்தால் அதற்கு முன்பே மூத்த மொழியாக நம்முடைய தமிழ் மொழி இந்த உலகத்தில் விளங்கி இருக்கின்றது. தொல்காப்பியத்திலே கூட பல இடங்களில் இலக்கணத்தை வகுத்துச் சொல்கின்ற நேரத்தில் முன்னோர் சொல்லியிருப்பது போல என்ற எடுத்துக்காட்டுகள் வரும். உதாரணமாக நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே என்று தொல்காப்பியம் கூறுகிறது.