உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுக்கும் என்கிற அந்த உம் தேவைதானா என்றால் தேவைதான். ஏனென்றால் அமுது என்று ஏற்கனவே ஒன்று இருக்கின்றது. அமுதுக்கு அமுது என்று பெயர் இருக்கின்ற் காரணத்தால் தமிழுக்கும் அதுதான் பெயர் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (கைதட்டல்) சொன்னார். நான் அமிழ்து என்று சொல்கிற நேரத்தில் பலருக்கு - - பகுத்தறிவு எண்ணம் படைத்தவர்களுக்கு அப்படியானால் அந்த எண்ணம் எனக்கில்லை என்று யாரும் கருதிக் கொள்ளக்கூடாது (கைதட்டல்) (சிரிப்பு) பகுத்தறிவு எண்ணம் உள்ள எல்லோருக்குமே இதென்ன கருணாநிதி திடீரென்று அமிர்தம் என்பதை நம்புகிறானே- அமிர்தம் என்றால் தேவாமிர்தம் என்று று சொல்வார்களே அதுவல்லவா என்று எண்ணக்கூடும். ஆனால் வள்ளுவர் அமிர்தம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார். அவரே அமிர்தத்தை ஒரு அதிகாரத்திலே குறிப்பிடுகிறார். அதிகாரத்தில் மக்கட்பேறு என்ற அதிகாரத்திலே திருவள்ளுவர் 7வது "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” என்று குறிப்பிடுகிறார். உழவுத் தொழில் செய்துவிட்டு வீட்டிற்கு கணவன் வருகிறான். அருந்துவதற்கு என்னவிருக்கிறது என்று கேட்கிறான். ஆருயிர் மனையாள் கூழ் கலையத்தைக் கொண்டு வந்து எதிரே வைக்கிறாள். இன்றைக்கும் இதுதானா என்று அலுத்துக்கொண்டே கேட்டு அதைக் குனிந்து பார்க்கிறான். அப்பொழுது தாழ்வாரத்தில் தவழ்ந்து கொண்டிருந்த மழலைக் குழந்தை தவழ்ந்து, தவழ்ந்து, தவழ்ந்துவந்து அந்தக் கலயத்திற்குள்ளே தன் பிஞ்சுக்கையை 7