உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டு முத்துக்களை கிளியோபாட்ரா தான் குடிக்கின்ற மதுவிலே போட்டு குலுக்கிக் குடித்தாள் என்கின்ற அந்த வரலாறும் நமக்கு உண்டு. இதெல்லாம் நம்முடைய வாழ்வின் சிறப்பை, வீரத்தை விளக்கக்கூடிய வரலாறுகள். இப்படி இந்து மகாக் கடலையும், சுற்றியுள்ள கடல்களையும் தாங்கள் நீச்சல் அடிக்கின்ற ஏரிகளாக மாற்றிக் கொண்டு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். இன்று பல கல் தொலைவு பயணம் என்பதும் பல கல் தொலைவில் கலாச்சார தொடர்பு ஏற்படுவது என்பதும் இன்றைக்கு எளிதாகிவிட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய தகவல் தொடர்புகள், கலாச்சாரத் தொடர்புகள் உறுதிப்படுத்தப்படுவதும், ஒன்றோடொன்று சந்திப்பதும் இயலாத காரியங்களாக இருந்தன. நான் சிங்கப்பூரில் கூடக் குறிப்பிட்டேன். ஆப்ரகான் லிங்கன் கொலை செய்யப்பட்ட செய்தி லண்டன் நகரிலே ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்ததாம். தந்திக் கம்பி வசதிகள் ருந்த அந்த காலத்திலும் கூட ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அந்தச் செய்தி கிடைத்திருக்கின்றது. அந்த அளவிற்கு தகவல் தொடர்பு தொலைதூரத்தில் இருந்த காலம் மாறி இன்றைக்கு நான் இங்கே பேசிக்கொண்டிருக்கும்போதே அதை இங்கிலாந்தில் கேட்கலாம். ஒலிபரப்புவார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் கேட்கலாம். - உலகம் இன்றைக்குச் சுருங்கி விட்டது. விஞ்ஞானம் இன்றைக்கு உலகத்தைச் சுருங்க வைத்துவிட்டது. ஒரே உலகம் என்றாலுங்கூட உலகம் சுருங்கிவிட்டது. என்றாலுங்கூட ஒரே உலகம் என்று சொல்வோம். ஆனால் அதே நேரத்தில் நாம் நம்முடைய நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவோம். அழிக்காமல் இருப்போம் என்கின்ற அந்த உணர்வு ஒவ்வொரு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா 26