உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181. மாற்பித்தியார், 182. மாறோக்கத்து நப்பசலையார், 183. மாற்றூர்கிழார் மகனார் பொற்றங் கொற்றனார், 184. முடங்கிக் கிடந்த சேரலாதன், 185. முரஞ்சியூர் முடிநாகராயர், 186. மோசிகீரனார், 187. மோசி சாத்தனார், 188. வடம் நெடுந்தத்தனார், 189. வடம் வண்ணக்கண் தாமோதரனார், 190. வடம் வண்ணக்கண் பெருஞ்சாத்தனார், 191. வடம் வண்ணக்கண் பேரிசாத்தனார், 192. பேரிசாத்தனார், 192. வடமோதங்கிழார், 193. வன்பரணர், 194. வண்ணப்புறக் கந்தரத்தனார், 195.வான்மீகியார், 196. விரிச்சியூர் நன்னாகனார், 197. விரியூர் நக்கனார், 198. வீரை வெளியனார், 199. விற்றூற்று மூதெயினனார், 200. வெள்ளாடியனார். 201. வெள்ளி வீதியார், 202. வெண்ணிக் குயத்தியார், 203. வெள்ளெருக்கிலையார், 204. வெள்ளைக்குடி நாகனார், 205. வெள்ளை மாளர், 206. வெறிபாடிய காமக்கண்ணியார், 207. வேம்பற்றூர்க் குமரனார். அந்த அளவிற்கு அரசர்களும், வாணிபர்களும், மகளிரும் புலவர் பெருமக்களாக இருந்து தமிழை வளர்த்து தமிழ்ப் பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். ஒன்றைச் சொல்கிறேன்., நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள், இரண்டு ஒப்பீடுகளைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு அம்புகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ஒரு அம்பு ராமபிரானுடைய அம்பு. இன்னொரு அம்பு ஓரியின் அம்பு. ஓரி என்றால் உங்களுக்குத் தெரியும். கடையேழு வள்ளல்களில் ஒருவன். பாரி, ஓரி, காரி என்பவர்கள் வரிசையில் ஒருவன். நம்முடைய சாமிவேலு அவர்களுடைய மகன் பெயர்கூட வேள்பாரிதானே. அந்த வரிசையிலே கொல்லிமலை மன்னனாக வாழ்ந்தவன் ஓரி மன்னன். அவனுடைய ஆற்றலை, திறமையைப் 32