உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" தாண்டிச் சென்று தரையில் இருக்கின்ற உடும்பின் மீது சென்று தைக்கும். இதுதான் அதற்குப் பொருள். ஓரி வி ழா கொல்லிமலையில், நடைபெற்றது. நானும் மறைந்த குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டோம். இந்தப் பாடலை ஒருவர் பாடிவிட்டுப் பேசும் போது சொன்னார். யானையைத் தாக்கிய பிறகு எப்படி உடும்பின் மீது அந்த அம்பு பாய முடியும்? யானையின் உயரமென்ன? உடும்பின் உயரமென்ன? யானையின் மீது பாய்ந்தால் அம்பு அதற்கு நேராகத்தானே செல்லும்? எப்படி உடும்பின் மீது பாய்ந்தது? என்று ஒரு கேள்வியை எழுப்பினார். நான் உரையாற்றும்போது அதைப்பற்றி சொன்னேன் "ஓரி வாழ்ந்த இடம் கொல்லிமலை. கொல்லிமலையின் உச்சியிலி ருந்து அம்பெய்தால் முதலில் யானை, நின்றால் அந்த மலைச்சரிவில் யானை, புலி, மான், பன்றி கடைசியாக உடும்பு என்று மேலிருந்து கீழ்நோக்கி அம்பு செல்லும்போது எல்லாவற்றையும் வீழ்த்தக் கூடிய ஆற்றல் அந்த அம்புக்கு உண்டு” என்று குறிப்பிட்டுவிட்டுச் சொன்னேன். - "இன்னொரு அம்பைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா ராம பிரான் எய்த அம்பு. அது ராவணனைக் குறி பார்த்து எய்யப்பட்ட ராம பாணம் ராவணனுடைய பத்து தலையையும் அறுத்துவிட்டு அவனைக் கொன்றுவிட்டு, அவன் உடலைத் துளைத்து பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய உடலிலே (அம்பின்மீது) இருக்கின்ற ரத்தத்தை கழுவிக் கொள்வதற்காக கடலுக்குச் சென்று ரத்தத்தையெல்லாம் கழுவிக் கொண்டு பிறகு அங்கிருந்து புறப்பட்டு திரும்பி வந்து ராமனுடைய அம்புறா தூணியிலே உட்கார்ந்து கொண்டது என்று கூறப்படுவதை அந்த அம்பை நம்புகிறீர்களே, இந்த அம்பை நம்பக்கூடாதா?” (பலத்த கைதட்டல்) என்று கேட்டேன். 34