உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்களத்தில்! இதை நினைத்து, நடக்கின்றாள் ஔவையம்மை! நாமணக்கும் தமிழம்மை! அறிவம்மை! அழகம்மை! காலூன்றிப் பணியொற்றி வருகின்ற தாயின் முன் கோலூன்றிப் பிறிதொரு தாய் வந்து நின்றாள். "அடி! தும்பை மலர் முடிதாங்கி! துவண்டுவிட்ட காலிரண்டும் வாழைத் தண்டாய்க் குளிர்ந்து வரும் நேரத்தில் நீ ஏன் வந்தாய்? விற்புருவம் என்றுன் ஆளன் அழைத்திட்ட காலம் போய் வில்லுருவம் முதுகில் பெற்ற இள நங்காய் விழியிரண்டும் வேலென்றார் அன்று; வழி இருண்டு போனதென்று கோல்கொண்டாய் இன்று! தமிழ்நாட்டு முத்தெல்லாம் தீர்ந்ததென்று பல் கழற்றிப் பிறநாட்டு வாணிபத்தைச் செய்தவளே! எங்கெழுந்தாய்? ஏன் பதைப்பு? என்ன வாட்டம்?" எனக் கேட்டுக் குறும்பு செய்தாள் ஒளவையம்மை! 40