உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்கிட்டாள். 'களம் சென்ற மகன் வீரம் புகழ்ந்து கூறிக் கண்கலங்காத்தாய் வீரம் காட்டுதலே தமிழர் மரபு முதியவளே! மறவர் குல வழக்கிற்குப் புதியவளாய் இருக்கின்றாய்! - வியக்கின்றேன்” என்றாள். முழுதும் கேள் பெருமாட்டி! பழுதொன்றும் காண மாட்டாய் என் நிலையில்! அழுதழுது என் விழிகள் வீங்கியதை மறுக்கவில்லை. பொழுதெல்லாம் கவலையினால் புலம்புவது பொய்யல்ல! ஏனென்று தெரிந்து கொள்வாய் நானொன்றும் மறைக்கவில்லை! ட் "சொல்" என்றாள் ஔவை சொன்னாள் அவள் "கொற்றக் குடை சாயாத கொடித்தேர் மன்னர் கற்றறிந்த பாவாணர் கடமைமிகு மாவீரர் மற்றவர்க்கும் பெருந்தலைவர் அறிவாய் நன்று அவர் படையில் இருக்கின்றோர் பல்லோர் வீரர் ஆட்டுக்கடா அணிவகுத்துச் செல்வது போல் அரசன் பின் நடப்பதற்குத் தயங்கமாட்டார். 42