உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக் கிடந்த அன்னை; கோவையாய்ச் சிவந்த உன் இதழைச் கிளியொன்று கொத்துமென்று தெரியாத பேதையா என்ன ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடை கூறவில்லை அன்னை ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து அல்லும் பகலும் உறக்கமின்றி வாடி வதங்கி உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்; உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவாரோ உன் தோழி கெஞ்சுகின்றேன், உடனே கேள் உறங்கி எழு உற்சாகமாய் இரு உறையூர் எங்கும் ஓடிவிடாது உன் - அறையூரில் அடங்கத்தான் போகிறது என்று இந்தப் பாடலை எளிமையாக்கியது தான் சங்கத் தமிழ். என்னுடைய சுற்றுப்பயணம் குறித்து கவிஞர் வைரமுத்து காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிங்கப்பூர் 46