உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்டிப் பார்த்தாள் - அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்! பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்! மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு - அவன் TIQU இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! இதைக் கண்டாள் இதயங் குளிர்ந்தாள்! "எதைக் கண்டாலும் இனிக்கவலை இல்லை என் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள். அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை - அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே? வாளிங்கே! அவன் நாக்கெங்கே?' (முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தக் கவிதையை உணர்ச்சிப் பெருக்கோடு மனப்பாடமாக கூறியதை கூட்டத்தினர் பலத்த கையொலிக்கிடையே வரவேற்று மகிழ்ந்தனர்.) 53 53