உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இங்கே என்னை வரவேற்று கவிதை படித்த கவிஞர் பூபாலன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ் மாநாட்டை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். மாநாடு நடத்தினால் மாத்திரம் போதாது. தமிழை நம் மனம் நாட வேண்டும் (கைதட்டல்) அதுதான் மாநாடாக இருக்கும். அறிவியல் தமிழை நாம் நாடவேண்டும். அதைச் சொல்லும்போது டத்தோ என்னைப் பார்த்துச் சொன்னார். உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்திலே நடத்துங்கள் - நாங்களும் நிதி திரட்டித் தருகிறோமென்றார். நான் நிதிக்காக மாத்திரமல்ல, அந்த மாநாடு இதுவரை நடைபெற்ற மாநாடுகளைப் போல இல்லாமல் அறிவியல் தமிழை வளர்க்கின்ற மாநாடாக அது சிறந்து விளங்கிட டத்தோ போன்றவர்கள் தங்களுடைய அரிய யோசனைகளைச் சொல்லவேண்டும். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலே வாழ்கின்ற பெருமக்கள், அறிவார்ந்த தமிழ்ப் பெருமக்கள், புலவர் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற தமிழ்ச் சமுதாயத்திற்கிடையே இன்றைக்கு மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்ற பெருமக்கள் அனைவரும் தங்களுடைய அரிய யோசனைகளைச் சொல்லவேண்டும். அப்போதுதான் தமிழகம் சிறக்கும். தமிழகம் சிறந்தால் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் சிறப்பார்கள். என்றென்றும் உங்களுடைய அன்புக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட கருணாநிதி உங்கள் முன்னால் அந்தச் சூளுரையை மேற்கொண்டு ஒன்றுபடுவோம் நாம். நம்மிடத்திலே இல்லாதது ஒரே ஒரு மைதான். நம்மிடத்திலே உண்மை இருக்கிறது. வாய்மை இருக்கிறது. இனிமை இருக்கிறது தூய்மை இருக்கிறது எல்லாம் இருக்கிறது தமிழர்களே ஆனால் நம்மிடையே ஒற்றுமை என்கிற 'மை'தான் இல்லை ( பலத்த கைதட்டல்) என் று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார். -