பக்கம்:மாணவர்களுக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி.ஆ.பெ. விசுவநாதம்

47

ஒரு பெரிய அறிவாளி என்றும், கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் தன்னைவிட குறைந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு மேடை ஏறவேண்டும். பேச்சு முடிந்ததும் அந்த எண்ணத்தை மேடையிலேயே விட்டுவிட்டு இறங்கிவிட வேண்டும். இன்றேல் அது அவனை வீழ்த்திவிடும்

சொற்ப்பொழிவு என்பது உயர்ந்த சொற்களைத் தேடிப் பிடித்து, ஒன்றன்பின் ஒன்றாக முறைப் படுத்தி அமைத்து, உரத்த குரலில் கூட்டத்தில் கடைசியில் உள்ள மக்களைப் பார்த்தும், சில சமயங்களில் இடதுபுறமும், வலது புறமும் பார்த்தும், ஒரு வரம்புக்கு உட்பட்டு பிழையின்றிப் பேசுவதே ஆகும்.

மழை பொழிதல் என்பதும் அப்படித்தான். மழை நீர் நேராக, வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக, துளித் துளியாக, அமைதியாகச் சொட்டுவதையே குறிக்கும். இன்றேல் அது பொழிதல் என்றாகாமல் சாரல், தூரல், சொட்டல், கொட்டல், வெப்பம், புயல் என்றாகி விடும்.

அம்மி பொழிதல் என்பதும் அப்படியே. அம்மியைப் பொழிகிறவர்கள் ஒரு தாமரை மலர் ஓவியத்தை முதலில் தன் உள்ளத்தில் அமைத்துக் கொண்டு, பிறகு அம்மியில் நான்கு புறமும் எல்லையை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு வரன்முறையாக அமைதியாக ஒன்றன்பின் ஒன்றாகப் பொழிந்து அழகுபடுத்துவதே ஆகும். இன்றேல் அது அம்மி பொழிதல் என்றாகாமல் கீரல், கொத்தல், கிளறல். குழறல், பெயர்த்தல், உடைத்தல் என்றாகி விடும்.

இவை போலவே சொற்பொழிவு என்பதும் முறை தவறினால் கிண்டல், கிளறல், உளறல், கூச்சல், குத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/46&oldid=1271709" இலிருந்து மீள்விக்கப்பட்டது