பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51. புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது

பெருமானார் அவர்களின் குழந்தைப் பருவம் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் ஆதரிப்பில் இருந்தது.

அப்துல் முத்தலிப் அவர்களின் உடல் முதுமையால் நலிந்து, தளர்ந்தது.

தாம் உயிரோடிருக்கும் பொழுதே, குழந்தையைத் தக்க பாதுகாப்பில் விட்டுவிடக் கருதினார். அதற்காக தம்முடைய புதல்வர்களை அழைத்து ஆலோசித்தார்.

அப்பொழுது, முதலாவதாக அபூலஹப், அக்குழந்தையின் பராமரிப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

“நீயோ பணக்காரன்; கடின உள்ளம் உடையவன்; தாய் தந்தையற்ற இக்குழந்தையை மகிழ்வோடு வளர்க்க உன்னால் இயலாது” என்று கூறிவிட்டார் அப்துல் முத்தலிப்.

ஹல்ரத் அப்பாஸ் தாம் வளர்ப்பதாகக் கூறினார்.

“உனக்குக் குழந்தைகள் அதிகம். அவற்றோடு இக்குழந்தையை எவ்வாறு ஆதரிக்க இயலும்?” என்று கூறிவிட்டார்.