பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


பெருமானார் அவர்கள், அபூபஸீர்! உமக்கும் உம்மைப் போன்ற நிராதனவானவர்களுக்கும் நிச்சயமாக, ஒரு வழி செய்வான்" என்று கூறி, அவரை குறைஷித் தூதர்களுடன் அனுப்பி விட்டார்கள்.

அபூபஸீர் தூதர் இருவருடன் மக்காவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அத்தூதர்களில் ஒருவரை வாளால் வெட்டி வீழ்த்தினார். மற்றொருவர் அதைப் பார்த்து மதீனாவுக்கு ஓடிவந்து பெருமானார் அவர்களிடம் நிகழ்ந்ததைக் கூறி முறையிட்டார்.

அப்பொழுது அபூபஸீரும் திரும்பி மதீனாவுக்கு வந்து விட்டார்.

அவர் பெருமானார் அவர்களிடம், "உடன்படிக்கைப்படி தாங்கள் என்னை அனுப்பி விட்டீர்கள். பிறகு நிகழ்ந்ததற்குத் தாங்கள் பொறுப்பு இல்லை" என்று கூறி விட்டு வெளியே போய்விட்டார்.


45. இஸ்லாத்தை உலகுக்கு அறிவித்தல்

மக்கா வாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்து வந்த சச்சரவு உடன்படிக்கையின் மூலம் ஓரளவு ஓய்ந்து, சமாதானம் ஏற்பட்டதும்