பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


அன்று பகல், அபூபக்கர் அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் பெருமானார் அவர்களைக் காண வந்தார்: அவர் கையில் பல்விளக்கும் குச்சி ஒன்று இருந்தது. பெருமானார் அவர்கள் அதைக் கூர்ந்து பார்த்தார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்து, அவர்கள் பல் விளக்க விரும்புவதாகத் தெரிந்தது. உடனே ஆயிஷா நாச்சியார் அவர்கள் தம் சகோதரரிடமிருந்து அக்குச்சியை வாங்கி, அதன் நுனியை மெதுவாக்கிப் பெருமானார் அவர்களிடம் கொடுத்தார்கள். பெருமானார் அவர்கள் அதைக் கொண்டு பல் விளக்கினார்கள். அப்பொழுது பிற்பகல் நேரம், "தொழுகையை ஒழுங்காக நடத்த வேண்டியது. பெண்களிடம் - அடிமைகளிடம் கருணையோடு இருக்க வேண்டும்" என்ற சொற்கள் அவர்களின் வாயிலிருந்து வெளிவந்தன.

அவர்கள் அருகில் தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் அடிக்கடி கையை இட்டு, முகத்தில் தடவிக் கொண்டிருந்தார்கள். பிறகு கைகளை உயர்த்தி, "ஆண்டவனே மேலான தோழன்!” என மூன்று முறை சொன்னார்கள். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போது