பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


வெள்ளம் பொங்கி வரும் ஆறு. இரண்டு பக்கமும் வயல்கள். கரும்பும், நெல்லும், வாழையும் கண் கொள்ளாக் காட்சி. வானளாவிய மருதமரம் அதில் வண்ணக் குருகு, வயலருகே, ஊர்-மாடமாளிகை. இந்த ஊரும் அவனுக்கு உரியது. அவனை ஊரன் என்று அழைப்போமா?

அதோ பரதவர் மீன் வேட்டையாடும் கடல். எவ்வளவு பெரிய மணல் மேடு, அலைகள் மோதும் காட்சியை என்னென்போம். ஆங்காங்கே உப்பங்கழிகள். மீனைத் தின்னும் நாரை சுரபுன்னைக்கு ஒடுகின்றன. இந்தக் கடற்கரையும் அவனுக்காமே. அவனைச் சேர்ப்பன் என்று அழைப்போமா?

கடற்கரை நாரையும் கழனிக் குருகும் “அவன் நாடன், ஊரன், சேர்ப்பன்” என்று பாடிக் கொண்டே பறந்தன.



15. கவரி வீசிய காவலன்


இரும்பொறையின் அரண்மனை. மணங்கமழும் மென்மலர் பரப்பிய முரசு கட்டில் இருக்கும் இடம்.

பலவர் மோசிகீரனார், இரும்பொறையைக் காண நெடுந் தொலைவிலிருந்து வந்தார்.

நடந்த களைப்பு. முரசு கட்டிலைக் கண்டார். அது, மனிதர் உறங்கும் கட்டிலாகவே அவருக்குத் தோன்றியது.

புலவர் கட்டிலில் அமர்ந்தார், அயர்வு நீங்கப் படுத்தார். உறங்கி விட்டார்.