பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

29


பாடிய பின், என் போன்றார் பாடோம் என்று சொல்வரோ? சொல்லார்!

உலகியற்கை அது அன்று! ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமுடையவர் உன் முன்னோர் வெற்றி கண்ட பின்னரும் நீ ஒய்ந்திருக்க வில்லை! நீயும் போர் செய்து, உன் பங்கிற்கு வெற்றியை புனைகின்றாய்! நீ எய்திய வெற்றியை என் பங்கிற்கு நானும் பாடுவேன், கேள் என்றார்.

இளங்கீரனார் பாடினார். அப்பாடலில், யானைப் படைகளும் குதிரைப் படைகளும் செல்லும் மிடுக்கைக் கண்டான் இரும் பொறை!

அரசன்-புலவர் யாருக்கு யார் தாழ்ந்தவர்?


21. பகைவர்களின் நடுக்கம்

இடையன் ஆடுகளை ஒட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி என்ன?

குட்டுவன் கோதை பகைவர்க்குப் புலிபோன்றவன் அவன் அரண்மனையைக் கண்டாலே பகைவர் நடுங்குவர். அவர்கள் எல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம் தானே. அவன் இருக்கும் திசையை திரும்பிப் பாராமல் ஒடி ஒளிவர்.