பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நூன் முகம்

'மாணவர் தமிழ் இலக்கணம்' என்ற பெயர் கொண்ட இலக்கண வரிசையில் இது முதற் புத்தகமாகும். 1957- ஆம் வருடம் அரசியலாரால் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின்படி இது எழுதப்பட்டதாகும். மொழி வளர்ச்சிக்கு இலக்கணம் இன்றி அமையாதது ஆகும். இலக்கணம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தே மாணவர்கள் மருளுகின்றனர். அவ்வாறான நிலையைப் போக்கவே இவ்விலக்கண வரிசை எழுதப்பட்டதாகும்.உதாரணங்களை முன்னர் அறிதலால் இலக்கண விதியை மாணவர்களே அமைக்க முடியும். முதலில் தெரிந்ததை அறிவதனால் அது கொண்டு தெரியாததை அவர்கள் உறுதிப்படுத்தலாம். ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள பயிற்சியும், பழம் பாடப் பயிற்சியும் மாணவர்கட்கு மிகுந்த பயன் தரும் என்பதே எனது கருத்து.

இதனைக் கண்ணுறும் தமிழாசிரியர்களும், தலைமை யாசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் இதனைப் பாடமாக வைத்து என்னை இப்பணியில் ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன்.

ஆசிரியர்.