பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


ஆண்பால். பெண்பால் தமையன். தமக்கை ஆசிரியன். ஆசிரியை இவற்றுள் அன்’ என்ற ஆண்பால் விகுதிக்குப் பதில் 'ஐ' என்ற விகுதி சேர ஆண்பால் பெண் பாலாயிற்று. " 'அன்' விகுதி பெற்ற ஆண் பாற் பெயர்களில் சில பெண்பாற் பெயராய் மாறும் பொழுது “ஐ’ விகுதி பெறும்.’’ ஆண்பால். பெண்பால்

 அவன்.          அவள்.    
  மகன்.          மகள்

இவற்றுள் 'அன்’ விகுதி பெற்ற ஆண்பாற் பெயர் ‘அள்’ விகுதி பெற்று பெண் பாலாயிற்று. " 'அன்' விகுதி பெற்ற ஆண்பாற் பெயர்களில் சில 'அள்' விகுதி பெற்றுப் பெண் பாலாய் மாறும்.’’ ஆண்பால் பெண்பால் குணவான். குணவதி பாக்கியவான். பாக்கியவதி இவற்றுள் 'ஆன்' விகுதி 'அதி' விகுதியாக ஆண்பால் பெண்பாலாயிற்று. " 'ஆன்' விகுதி பெற்ற ஆண்பாற்