பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

7. எண்

அரசன், தந்தை,அவன் - ஆண்பால் ஒருமை.
அரசி, ஒளவை, அவள் - பெண்பால் ஒருமை.
அரசியர்,புலவர், அவர் - பலர் பால் பன்மை.
கல், மரம், அது - ஒன்றன் பால்.
மரங்கள், மாடுகள், அவை - பலவின் பால்.

“ஒன்று, இரண்டு என்று எண்ணப் படுவது எண்ணாம். இது ஒருமை, பன்மை என இரு வகைப்படும். ஒன்றைக் குறிப்பதே ஒருமையாம். பலவற்றைக் குறிப்பது பன்மையாம்.”

“ஆண்பாலும், பெண்பாலும், ஒன்றன் பாலும் ஒருமைக்குரியனவாம். பலர் பாலும், பலவின் பாலும் பன்மைக்குரியனவாம்.”

திணை, பால், எண் என்ற மூன்றிற்கும் உள்ள உதாரணம்:

திணை

ஒருமை

பன்மை

பால்

பால்

ஆண் அவன் பலர் அவர்
உயர்திணை பெண் அவள் பலவின் அவை
அஃறிணை ஒன்றன் அது