பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. போலி மயல் - மையல் - இதில் சொல்லுக்கு முதலில் அகரத்திற்குப் பதில் ஐகாரம் வந்தது. இதன் பொருள் மாறுபடவில்லை. நேயம் - நேசம் - இதில் சொல்லின் நடுவில் யகரத்திற்குப் பதில் சகரம் வந்தும் இதன் பொருள் மாறுபடவில்லை. m நிலம் - நிலன் - இதில் சொல்லின் இறுதியில் மகரத்திற்குப் பதில் னகரம் வந்தும் இதன் பொருள் மாறுபடவில்லை. இவ்வாறு 'ஒரு .ெ சா ல் லி ல் ஓர் எழுத்துள்ள இடத்தில் அவ்வெழுத்துக்கு ஈடாக வேருெரு எழுத்து நின்றும் அதன் பொருள் வேறுபடாது இருப்பதே போலியாம். இவ்வாறு சொற்களின் முதலிலும், இை யிலும், கடையிலும் போலி எழுத்துக்கள் வருவதால், அது முதற் போலி, இடைப் போலி, கடைப்போலி என்று மூன்று வகைப்படும். முதற் போலியும் இடைப் போலியும் முதற் போலி இடைப் போலி - பசல் - பைசல் அமச்சு -அமைச்சு - இவ ற் றில் ச க ரத் தி ன் முன் அகரம் ஐகாரமா யிற்று. மஞ்சு - மைஞ்சு இலஞ்சி - இலைஞ்சி - இவ ற் றில் ஞகரத்தின் மு ன் அகரம் ஐகாரமா யிற்று.