பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


6. இடைச் சொல் "தெரிநிலையும், தெளிவும், சந்தேகமும், முற்றும், எண்ணும், சிறப்பும், எதிர்மறையும், எச்சமும், வினவும், விருப்பமும், ஒழிந்த சொல்லும், பிரிநிலையும், கழிதலும், ஆக்கமும் ஆகிய பதின்ைகும் இவை போல்வன பிறவும் இடைச்சொற்கள் தரும் பொருள்களாம்." 7. மன், மற்று, அம்ம, ஆங்கு. என, என்று ஆகிய இடைச்சொற்கள் மன் – அது மன்கொண்கன் தேரே-இதில் 'மன் வேறு பொருளின்றி நிற்றலால் அசைநிலை, கூரியதோர் வாள் மன் - இதில் மன்' என்பது வாள் இப்பொழுது ஒடிந்து விட்டது என்னும் ஒழிந்த சொல்லை உணர்த்துதலால் ஒழியிசை. பண்டு காடுமன் - இதில் மன்' என்பது இன்று வயலாயிற்று என்னும், பொருளை உணர்த்துவதால் ஆக்கம். சிறிய கண் பெறினே எமக்கீயுமன்னே - இதில் 'மன்' என்பது அவன் இப்பொழுது இறந்ததனுல் எமக்கு ஈதல் கழிந்தது எனப் பொருள்படுதலால் கழிவு. எந்தை எமக்கருளுமன் - இதில் மன்' என்பது மிகுதியும் அருளுவான் என்னும் பொருள் தருதலால் மிகுதி. மன்ன உலகத்து மன்னியது புரிமோ -இதில் மன் என்பது நிலை பெருத உலகத்தில் நிலைபெற்றதைச் செய் என்று கூறுதலால் நிலைபேறு.