பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


6. குடத்தை வனைந்தான் - இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர். 7. மற்ருென்று - இது இடைச் சொல் தொடர். 8. கனி பேதை - இது உரிச் சொல் தொடர். 9. பாம்பு பாம்பு - இது அடுக்குத் தொடர். வினைமுற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், எழுவாயும், விளியும் ஆகிய ஐவகைப் பொருளில் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும், வேற்றுமைப் பொருளில் அவற்றின் உருபுகளாகிய இரண்டாவது முதலிய ஆறு உருபுகளும் இடையில் விரிந்து நிற்கப் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும், இடைச்சொல் புணர்ச்சியும். உரிச்சொல் புணர்ச்சியும், ஒரு சொல் அடுக்கி வரும் புணர்ச்சியும் ஆகிய ஒன்பதும் தொகா நிலைத் தொடர்களாம்". குத்திரம்: "முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப் பொருள் ஆறுஉரு பிடையுரி அடுக்கு இவை தொகாநிலை”. குறிப்பு:- மேற்கூறிய இரு வழியிலும் வந்த தொடர்களெல் லாம் தழுவு தொடராம். அதாவது நிலைமொழி யானது வருமொழியோடு பொருட் பொருத்த முறத் தழுவிய தொடராம். மேற்கூறிய இரு வழியிலும் தழாத் தொடரும் உண்டு. அதாவது நிலைமொழியானது. பொருட் பொருத்த முறத் தழுவாத தொடரும் உண்டு.