பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 போவி 13. சில சொற்களில் ஓர் எழுத்து நிற்கவேண் டிய இடத்தில் மற்ருேர் எழுத்து நிற்பினும், பொருள் கெடாதிருப்பது போலி எனப்படும். (போல வருவது போலியாம்.) (உ.ம்) குளம் குளன் ஐயர் அய்யர் 14. இப்போலி மூன்று வகைப்படும். அவை மொழி முதற்போலி, மொழி இடைப் போலி மொழிக் கடைப்போலி என்பன. 15. மொழி முதல் போலி என்பது, சொல்லின் முதலில் ஒர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஒர் எழுத்து வருவதாம். ஒளவை அவ்வை (قت عه) பெளத்தர் பவுத்தர் நாயிறு ஞாயிறு 16. மொழியிடைப் போலி என்பது, சொல் லுக்கு நடுவில் ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஒர் எழுத்து வருவதாம். அரசன் அரைசன (فادع) பித்து பிச்சு 17. மொழிக் கடைப்போலி யாவது, சொல் லுக்கு ஈற்றில் ஒர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஒச் எழுத்து வருவதா ம்.