பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144. பயிற்சி-16 1. கீழ் வரும் வியங்கோள் வினைமுற்றுக்கள் இன்னின்ன பொருளில் வந்துள்ளன என்பதைக் குறிப்பிடுக; ஒதுக, உண்க. அருளுக, கெடுக, ஒங்குக, வீழ்க மலர்க, வீக, ஆழ்க, சூழ்க, செலீயர், உண்ணி. 2. இவ் வினைமுற்று ஒவ்வொரு பாலிலும் ஒவ்வோர் இடத் திலும் வரும்படி தனித்தனி உதாரணம் தருக. ஏவல் வினைமுற்று 64. ஏவல் வினைமுற்று என்பது, கட்டளேப் பொருளில் வரும். (உ-ம்) நட, வா. நடமின், வருவீர். குறிப்பு : இவ் வினைமுற்று முன்னிலையில் மட்டும் ஒருமை பன்மை என்னும் எண்களில் வரும். (உ-ம்) நீ படி-முன்னிலை ஒருமை. நீங்கள் படியுங்கள்-முன்னிலைப் பன்மை. கேள்விகள் 1. ஏவல் வினையாவது யாது ? 2. ஏவல்வினை எவ்விடத்தில், எவ்வெண்ணில் வரும் ? பயிற்சி-17 1. ஏவல் வினைமுற்று ஒருமையிலும் பன்மையிலும் வரத் தனித்தனிப் பத்து உதாரணம் தருக. 2. கீழ் வருவனவற்றில் ஒருமை ஏவல் வினைமுற்று எவை? பன்மை ஏவல் வினைமுற்று எவை ? செய்வாய், செப்தி, நடவாய், கூறுதி, செய்மின் கூறு மின், போற்றுவீர், கூவும், நில், வா.