பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் மாணவர் அறிவை வாழ்த்துவோர் வளர்க!

துறவிகள் மடம் ஒன்றில், ஒரு சந்நியாசி வயதேறியதின் காரணமாகத் தள்ளாமையால் அவர் உடல் பலம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன், 'ஐயா, உங்களுக்குக் கல்வி போதித்த ஆசிரியர் ஒருவரது திறமையைக் கூறினால், அது எமக்கும் ஓர் அனுபவமாக அமையாதா?’ என்று பணிவோடு குருவருகே நின்று கேட்டான்.

அந்தத் துறவி பெருமூச்சு விட்டுக் கொண்டே, சீடா, நான் எவராவது ஓர் ஆசிரியரிடத்தில் பாடம் கேட்டிருந்தால் அவர் அருமையை உன்னிடம் கூறுவேன்! பல மகான்களிடம் அல்லவா நான் கல்வி கற்றேன். இருந்தாலும், எனது அனுபவத்தைக் கூறுகிறேன் - தெரிந்து கொள் மாணவனே...! என்று ஒரு கதையைக் கூறினார்! கதை சொல்லும் ஆசை ஆசிரியரிடம் மோதியதால் பெருமூச்சு இழுப்புச் சற்றுத் தணிந்தது! "நான் ஓர் ஊருக்குச் சென்றேன். அங்கே உன்னைப் போன்ற ஒரு சிறுவனைச் சந்தித்தேன். வயது பத்துதான் இருக்கும்! அவன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டே என்னருகே வந்தான்.

'சிறுவனே! மெழுகுவர்த்தியை ஏற்றினாயா? என்றேன்! அவன் ஆம் என்றான்.

உடனே அந்தச் சிறுவனைக் கேட்டேன்; மெழுகுவர்த்தி ஒளியோடு எரிந்தது அல்லவா? அந்த வெளிச்சம் எங்கே இருந்து வந்தது தம்பி என்றேன்! எந்தவித அதிர்ச்சியும் அந்த சிறுவனுக்கு எழவில்லை. உடனே அவன் அந்த மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அனைத்துவிட்டு, "என்னைப் பார்த்து, மகானே! மெழுகுவர்த்தியில் எரிந்து கொண்டிருந்த அந்த ஒளி, இப்போது எங்கே போயிற்று?’ என்று பளிச்சென்று கேட்டான் சீடன் - அந்த ஆசிரியனை

உடனே அந்த ஆசிரியன் "ஐயோ! அறிவு எங்கெங்கோ மறைந்து, ஒளிந்துக் கிடக்கின்றதே" என்று பரபரப்புடன் அந்தச் சிறுவனது பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டான்; பாராட்டினான் சிறுவனை நீ குருவுக்கு மிஞ்சிய சீடனப்பா என்று துறவி பெருமைப்பட்டார்!

மாணவ மணிகளே! நீங்களும் உங்கள் அறிவை சமயத்துக் கேற்றவாறு பதில் கூற வளர்த்துக் கொண்டு புகழ் பெறுங்கள். உங்களை உலகம் வாழ்த்தும்; வணங்கும்!