பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

வஷிஸ்தா (Yogavashishta) என்ற இந்துமத ஞான நூலைப் பாரசீக மொழியில் பெயர்த்துப் பாரசீக மொழியை ஞான இலக்கிய மாக்கினார்.

இந்து மத மக்களில் மிகப் புனிதமான நூலென்று போற்றப்படும் 'பகவத் கீதை'யையும் சமஸ்கிருதத்திலிருந்து பாரசீக மொழிக்கு மொழி

பெயர்த்தவர் தாரா!

அந்தக் காலத்தில் யார் யார் புகழ் பெற்ற சமஸ்கிருத மொழி நிபுணர்களோ, அவர்களது உதவிகளால் உபநிடத நூல்களையும், பாரசீக மொழியில் ஒன்றிரண்டாக அல்ல, 52 வால்யூம்களை, தொகுப்பு களாகத் தொகுத்து தாரா ஷ9ஹோ மொழித் தொண்டாற்றியவர்.

பாரசீக மொழி அன்று உலகப் புகழ் பெற்றிட, தாரா ஷ9ஹோவும் ஒரு காரணர் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சமஸ்கிருத மேதைகள் ஒன்றுகூடி, அந்த இந்து மத நூல்களை பாரசீகர்கள் பின்பற்றுவதற்கு வசதியாக, தூய்மையான, நேர்மையான, நேர்த்தியான சிறு சிறுக் குறிப்புக்களையும், பொழிப்புரை விளக்கங் களையும் தாரா அறிவுரைகளுக்கேற்ப அந்த அறிஞர்கள் மொழி மாற்றம் செய்துள்ளார்கள்.

இந்த மாபெரும் மத உணர்வுப் பணிகளை ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றும் மொழி மாற்றத் தொண்டுகள் அடங்கிய இந்த நூலை, பாரசீக நாட்டில் sin + Akbar என்ற பெயரில், அதாவது, ‘lossoluosh &gańuth' (The Great Secret) என்ற நூற் பெயரோடு வெளியிட்டார்கள் என்றால், தாரா ஷ9ஹோவின் மத நல்லிணக்க மனம், மதநல்லிணக்கத் தொண்டு எப்படிப்பட்டதாக அவர் நெஞ்சில் வேரூன்றிப் பதிந்திருக்க வேண்டும் என்பதை இக்காலப் பேரறிஞர்களும், பொது மக்களும், மாணவ மணிகளும் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

"அக்பர் இரகசியம்" என்ற அந்தப் புத்தகக் களஞ்சியத்திற்கு தாரா ஷஇஹோ எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிடும்போது, நான் இந்த மத மாற்ற ஞானச் சேவையை கி.பி. 1641-ஆம் ஆண்டிலேயே ஆற்றத் தொடங்கினேன்.

அதற்காக இந்து மதப் பேரறிவாளர்களை நாடினேன், சமஸ்கிருத மொழியிலே இதற்கான ஆதாரங்கள் உண்டா என்றும் தேடும் பணியை ஏற்றேன். இறுதியாகப் பலர் உதவியால் இந்த நூலை 52 தொகுப்புகளாகத் தொகுத்தேன்” என்கிறார்.