பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

அதற்குப் பிறகு, ரோஜர் பேகன் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி, பலவிதமான விஞ்ஞான முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்து, “படகு மிதப்பதற்குத் தண்ணின் உதவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு பொருளை மிதக்க வைக்கக் காற்றின் உதவியும் தேவை” என்ற முடிவுக்கு வந்தார்.

அறிவியல் வரலாற்றில் விமானத்தைல் أنشطة உருவாக்கிட 1783-ஆம் ஆண்டில் இரண்டு பிரெஞ்சு விஞ்ஞானிகள் புறப்பட்டார்கள். ஜீன் எஃப் பிளேட்ரே அவர்களுள் ஒருவர். அவர் ஒரு மருத்துவர். அடுத்தவர் மார்க்கியுஸ் டி அர்லாண்டஸ் என்பவர். அவர் நுட்பமான அறிஞர்.

லியானார் டோ டாவின்சி

இன்ஜினியர் , "אייל: 5

முதன் முதலாக அவர் ஓர் ஆகாய விமானத்தைச் செய்திட ஒரு வழியை கண்டுபிடித்தார். அது லினன் என்ற துணியாலும், பேப்பர் என்ற தாளாலும் உருவாக்கப்பட்ட பலூன் ஆகும். வெளியிலே வீசும் காற்றை விட அது மிகவும் லேசான புகை ஆவி (Gas) நிரப்பப்பட்ட பலூனாகும்.

அந்த இரண்டு பிரெஞ்சு விஞ்ஞானிகளும்; வானத்தில் காற்றில் மிதந்து 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரீஸ் நகருக்கு மேலே பலூனில் பறந்து மிதந்தார்கள்.

வேறோர் இரண்டு ஃபிரெஞ்சு சகோதரர்களான ஜேக்குவஸ் எடின்னி மாண்ட் கோல்ஃபியரும், ஜோசப் மைக்கேல் மாண்ட் கோல்ஃபியரும் வெப்பக் காற்றினாலான பலூன் ஒன்றைச் செய்தார்கள்.

அவர்கள் இருவரும் லையோன் என்ற நகரருகே உள்ள அன்னோனேய் என்ற ஊரிலுள்ள பேப்பர் தொழிற்சாலையிலே பணிபுரிபவர்கள்.

அந்த பிரெஞ்சு சகோதரர்கள் 5.6.1783-ஆம் ஆண்டில் வெப்பமான காற்றடைத்த பலூனில் எரி நெருப்புக் கேஸ் காற்றை அடைத்து வானில் பறக்க விட்டார்கள்.

அவர்கள் தொடர்ந்து அந்த பேப்பர் பலூனில் அடைத்தக் காற்றின் உதவியால் இருவரும் பாரிஸ் நகரத்தில் சற்று உயரமாகப் பறந்தார்கள்.

விஞ்ஞானத்தால் பறக்கும் உணர்ச்சியை அவர்களுடைய சோதனைகள் அவர்களுக்கு உண்டாக்கியதுடன், காற்றினால் பறக்கும் வான்கலம் விஞ்ஞானமாகவும் அது விளங்கியது.