பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் கிரிடிட் கார்டு உருவானது எப்படி?

மாணவ - மணிகளே

வர் பெயர் ஃப்ராங்க் மெக்னமரா, அமெரிக்கர். வணிகம் நடத்தும் தொழிலதிபர். இவர்தான் முதன் முதலாகக் கிரிடிட் கார்டு என்ற முறையை 1950-ஆம் ஆண்டில் வணிகர்களிடையே அறிமுகப் படுத்தியக் கண்டுபிடிப்பாளர்.

ஒர் உணவு விடுதிக்குச் சென்ற ஃப்ராங்க் மெக்னமரா, உணவு உண்ட பின்பு தனது பணப் பையைக் கை தவற விட்டுவிட்டார். அதனால், உண்ட உணவுக்குக் கொடுக்க அவர் கையில் பணம் இல்லை. தமிழ்நாட்டு உணவு விடுதி முதலாளியாக இருந்தால் உணவு உண்ட காசுக்கேற்ப, உண்டவனை இட்லி-தோசைக்கு மாவாட்டச் சொல்வான்! அல்லது உதைப்பான். எதற்கும் உதவாத உடம்பனாக இருந்தால் எச்சில் இலையை எடுத்துப் போடு, அல்லது - பிளேட்டையாவது கழுவு என்பான்.

ஆனால், ஃப்ராங்க் மெக்னமரா அமெரிக்காவில் அல்லவா பிறந்தார்? அதனால் அவரது மூளை விஞ்ஞான அடிப்படையில் வேலை செய்தது. அவர் தான் 'கிரிடிட் கார்டு என்ற விஞ்ஞான முறையைக் கண்டுபிடித்தார்.

இந்த கார்டு இப்போது உணவு விடுதிக்கு மட்டுமா பயன்படுகின்றது? எல்லா வகையிலும் வங்கி முதல் செருப்புக் கடை வரைக்கும் உலக மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்!

அது மட்டுமல்ல; கிரிடிட் கார்டுக்காரன் என்றால், உண்ட ஓட்டலுக்குப் பணம் கொடுக்க வக்கற்றவன் என்றா எண்ணுகிறார்கள்? ஏதோ ஒரு கோடீஸ்வரன், குபேரன் பெற்ற பிள்ளையைப் போலல்லவா விஞ்ஞான உலகம் அவனை எடைபோட்டு மதித்துக் கெளரவம் தருகின்றது?

மாணவ மணிகளே! வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நீங்களும் கிரிடிட் கார்டுக்காரர் ஆவது எப்போதோ!