பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

இந்தப் புகழ், பள்ளிக் கல்வி ஆண்டு முடியும் வரை நீடித்தது. நியூட்டன் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாகக் கல்விச் சாதனைகளைச் செய்து கொண்டே வந்தார். அவர் புகழ் பள்ளியில் கொடி கட்டிப் பறந்தது.

நியூட்டனுடைய இந்தச் செயல் ஊக்கம், அவர் வீட்டுக்கு வந்ததும், விளையாட்டுப் பொம்மைகள், மரத்தால் செய்யப்படும் மேசை நாற்காலிகள் அழகழகான பெண்களது விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைச் செய்து காட்சியகங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் ஆக்கமானது.

அவ்வாறு அவர் செய்த அதிசயப் பொருட்களிலே ஒன்று - பெருங் காற்றாடி. அதாவது (Wind Mill). இதுபோன்ற காற்றாடிகள் தங்களுக்கும் தேவை என்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் நியூட்டனிடம் விலைக்குப் பெற்று அவரவர் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு நியூட்டன் தண்ணிரில் இயங்கும் கடிகாரம் ஒன்றைச் செய்தார். கடிகாரம் நீள்தண்டுச் சக்கரத்தில் தண்ணித் துளிகள் விழும்போது - அது, நகரும் சக்தியுடையதாக இருந்தது. தினந்தோறும் அதற்குச் சிறிதளவு தண்ணி இருந்தாலே போதும், குறிப்பிட்ட சரியான நேரத்தைக் காலையில் காட்டும் திறன் பெற்றதாக அந்தக் கடிகாரம் இருந்தது. அதனால், சுற்றுச் சார்பில் அடுத்தடுத்துக் குடியிருக்கும். ஒவ்வொரு வீட்டுப் பயன்பாட்டிற்கும் அக் கடிகாரம் உதவியாக இருந்தது. நியூட்டன் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தையார் மரணமடைந்து விட்டதால், அவருடைய உறவினர்கள் அவருக்குரிய எல்லாவித ஆதரவுகளையும் கொடுத்து அவரை வளர்ந்து வந்தார்கள்.

நியூட்டன் கடுமையாக உழைத்துப் படித்தார். தனது சிறப்பான அக்கரையைக் கணிதப் பாடத்தில் காட்டினார். அதைக் கண்ட அவருடைய உறவினர்கள், கல்வி மீது அதிகப் பொறுப்பை எடுத்துக் கொண்டு அவரைத் தொடர்ந்து படிக்க வைத்தார்கள். நியூட்டனும் தனது கணிதப் பாடத்தில் குறிப்பிடக் கூடிய மாணவராகத் திகழ்ந்தார்.

நியூட்டன் லண்டன் அருகே உள்ள லிங்கன்ஷையர் வட்டத்தில், ஊல்ஸ் தொர்பி என்ற கிராமத்தில் 1642 - ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 19-ஆம் வயதில் அவர் தனது நகரருகே உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் படிப்பை முடித்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, இயற் பியலைச் சார்ந்த கணக்கியல் கல்விக்கான விதிகளைக் கற்றுத் தேர்ந்தார். இவ்வாறு பொறுப்புடன் படிந்து வந்த அவரது கணிதக் கல்வி, அவருக்குப் பின்னாலும் ஒரு 300 ஆண்டு விஞ்ஞானக் கல்வி வளர்ச்சிக்குரிய அடிப்படைக் கல்வியாக அது விளங்கியது.