பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவம் மாண்புற : அய்ன்ஸ்டின் உயிலுரை

L ខ្លា...ា

ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் என்ற அறிவியல் மேதை அணு முதல் அண்டம் வரையுள்ள உலக விஞ்ஞானத் தத்துவங்களில் ஊடுருவி, ஆய்ந்து, பல உண்மைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு உரைத்தவர். இளம் வயதில் அவர் திக்குவாயராகத் தெத்தித் தெத்திப் பேசும் குறை உடையவராக இருந்தார்.

அதனால், அவரது வாய்ச் சொற்களில் எந்த வார்த்தைகளை அவர் பேசினாலும், பொறுமையாக, பொறுப்பாக, சிதைவுற்றுச் சிதைவுற்று மெதுவாகத்தான் அவர் பேசுபவராக இருந்தார்.

இந்தக் குணம் வகுப்பு ஆசிரியருக்குக் கோபத்தை அடிக்கடி கிளறிவிடுவதால், அந்தப் பள்ளி ஆசிரியர் அவரை "முட்டாள், முட்டாள்" என்றே அழைப்பார்.

இவ்வாறு, கூறும் வகுப்பாசிரியர் மீது மாணவன் ஐன்ஸ்டினுக்கு கோபமே வராது. காரணம். தனது திக்குவாய்த் தன்மை அவருக்குப் புரிந்த ஒன்றல்லவா?

ஆனாலும், பொய் பேசாத, உண்மைகளையே உரைக்கும் மாணவர் அவர் என்பதால், அவரிடத்திலே ஒரு தனி மரியாதையை, மதிப்பை அவரது ஆசிரியர் வைத்திருந்தார்.

எந்தக் கேள்வியை ஆசிரியரிடம் அய்ன்ஸ்டின் கேட்டாலும், ஏன்? எப்படி? எதற்காக என்ற மறு வினாக்களைத் தொகுத்துக் கேட்கும் ஞானி சாக்ரடீசைப் போலவே - அய்ன்ஸ்டினும் வகுப்பில் விளங்குவார். இவ் வாறான கேள்விகளை அவர் வகுப்பில் கேட்பதால், ஆசிரியர் அவரை மீண்டும் முட்டாள், முட்டாள் என்றே மாணவர் மத்தியில் கோபிப்பார்.

எந்தப் பாடத்திலும் அவருக்கு முழுமையான அறிவு இருக்காது. இத்தகைய மாணவரான அய்ன்ஸ்டின், கணிதத்திலும், பெளதிகப் பாடங்களிலும் தணியாத ஆர்வமுடையவராகவே காணப்பட்டார்.