பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 433

சண்டைகளை வெறுக்க வேண்டும்; மனித இயல்புகளுக்குக் கூடுமானவரை அமைதிக்காக உயிரையே தியாகம் செய்ய நேர்ந்தாலும், அவ்வாறு செய்வதில் தவறில்லை. அதுதான் தியாகமாகும்.

தாராளம் மனம் படைத்திருக்க ஒருவன் கற்க வேண்டும். தமக்கென்று வாழாத் தன்மையையும், பிறர்க்கென்று வாழும் பண்பையும் உடையவனே மக்களால் புகழப்படும் அறிஞனாவான்.

வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்து வருவது என்ற வரட்டு வேதாந்தம் பேசிக் கொண்டே காலம் தள்ளக் கூடாது.

எதிலும் விரக்தியாக, சலிப்பாக வாழ்பவன் வாழவே தகுதியற்றவனாவான். எதிலும் சுவைஞன் உள்ளம் பெற வேண்டும். அந்த மனம் அடைந்தால்தான் வாழ்க்கையின் நெளிவு, மெலிவு, தெளிவு வளைவுகளை நன்குணர்ந்து, அவற்றை அதனதன் சுவைகளுக்கு ஏற்றார்போல் அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ்வான் - அதுதான் சிறப்பான வாழ்க்கை.

வாழ்க்கை - கானல் நீர். பொருளற்றது; இன்பம் இல்லாதது என்று யாருமே எண்ணவே கூடாது. எதையும் சமாளித்து எதிர் நீச்சல் போடும் துணிவே துணையாகும்.

மானிட இன்பமும், மனித உயிர்களும் மேன்மையுற உழைப் பவர்களே நல்லவர்கள். அவர்கள் உலகத்தாரால் நேசிக்கப்படுவார்கள்.

தன்னை ஒத்தவன் உலகில் உயரத்தக்கப் பணிகளைச் செய்து கொடுத்து, அவர்கள் வாழ்வை உயர்த்துபவனே உயர்ந்த மன்தன்

எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தனியாத ஆர்வம், விருப்பம் ஒவ்வொரு மனிதனுக்கும், இளைஞனுக்கும் சிறப்பைத் தரும்.

நல்லவனாக இருக்க மாணவர்களுக்குப் பயிற்சித் தரவேண்டும். நல்லதையே செய்திட மாணவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். அவர்களால்தான் அவன் பிறந்த நாடும் நன்மை பெறும்.

பணம் அல்லது உலகில் உள்ள மற்ற செல்வங்களுள் ஏதாவது ஒன்று மனித சமுதாயத்தின் மேம்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்குமா என்பது சந்தேகமே வேண்டுமானால் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

பணம் இளைஞர்களுக்குரிய அல்லது மாணவர்களுக்குரிய அல்லது சில மக்களுக்குரிய குணத்தையும், அலட்சியப் போக்கையும், அகந்தை சுபாவத்தையும் தரக்கூடியதாக இருக்கக் கூடும். ஆனால்,