பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜேம்ஸ் சிம்ப்சன் - o குளோரோ ஃபார்ம்! gನ ಹುಕಣೆ | (Chloroform) لساسسسسسسا

மாணவ - மணிகளே!

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலைவரும்போது, அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்து அவர்களை உயிர் வாழ வைக்கிறார்கள்.

அந்த அறுவை சிகிச்சையை செய்வதற்கு முன்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு குளோரோ ஃபார்ம் என்ற மயக்க மருத்தை நோய்க்கு ஏற்றவாறு கொடுத்துச் சிறிது நேரமான பிறகே அறுவை செய்கிறார்கள்.

அறுவை நடக்கும் நேரத்தில் கொடுக்கப்பட்ட அந்த மயக்க மருந்து வலி தெரியாமல் நோய் உணர்வுகளைத் தடுத்து நிறுத்துகின்றது.

உடலின் எந்தப் பகுதியில் அறுவை நடக்கின்றதோ, அந்தப் பகுதி மட்டுமே வலி தெரியாமல் மரத்துப் போவதற்கோ அல்லது உடல் முழுவதும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ மருத்துவர்கள்.அந்த மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்.

நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தும் முறை 19-வது நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது. இந்த குளோரோ ஃபார்ம் சிகிச்சை முறையை ஜே.ஒய் சிம்ப்சன் என்பவர் 1847-ஆம் ஆண்டில் முதன் முதல் கண்டுபிடித்தார். ஈதர் என்ற சிகிச்சை முறையைக் கண்டு பிடித்தவர் C.W. லாங் என்பவராவார்.

மாணவ - மணிகளே! அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் நோயாளிகளுக்கு சிம்ப்சன் கண்டுபிடித்த குளோரா ஃபார்ம் மயக்க மருந்து பெரும் உயிர்காக்கும் மருந்தாக இருப்பது மட்டுமன்று; எண்ணற்ற நோயாளிகள் உயிர் வாழவும் சஞ்சிவி மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.