பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 439

மருத்துவர்கள் சிகிச்சைக் கொடுக்கின்றார்கள். அதற்கு இந்த எக்ஸ்-ரே கருவி உதவிதான் காரணம்.

எக்ஸ்-ரே கருவி இப்போது பலவித தொழில்களுக்குப் பயன்படுகிறது. எடுத்துகாட்டாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் கண பரிமானத்தை அளக்கவும் பயன்படுகிறது. அல்லது மறைக்கப்பட்டுள்ள பழுதுப்பட்ட குறைபாடுகளைக் கண்டறியவும் உதவுகின்றது.

அதே நேரத்தில் ஊடுகதிர் கருவி பல துறை விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை உணரவும் உபயோகமாக உள்ளது. அதாவது உயிர் நூலறிவு ஆய்வுகளுக்கும், வானுல் கோள் ஆய்வுகளுக்கும் எக்ஸ்-ரே உதவி செய்கின்றது.

குறிப்பாகக் கூறுவதானால், அணு இயக்கத்தைச் சார்ந்த நுணுக்கங்களை நுண்ணறியவும், அணுத் திரண்மம் திறன் கொண்ட சக்திகளைப் புரியவும்: விஞ்ஞானிகளுக்குரிய ஆராய்ச்சிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட ஓர் அற்புதக் கருவியாகவும் - எக்ஸ்-ரே இருந்து வருகின்றது.

எக்ஸ்-ரே விஞ்ஞானத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, அதற்குரிய தகுதியோடு இராண்ட்ஜன் இரவு பகலாக அயராது உழைத்தார். அவர் தன்னந்தனி மனிதராகவே பாடுபட்டார். அவருடைய கண்டுபிடிப்புகள் எதிர்பாராதவையாகவே அமைந்திருந்தன. அவர் தனது எக்ஸ்-ரே ஆராய்ச்சிப் பணிகளை மிக நேர்த்தியாகவும், முதல் தரமாக இருக்கவும் பின்பற்றினார். இராண்ட்ஜென் கண்டுபிடிப்புகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுபவையாகவும், கதிரியக்க நுண்மங்களைக் கண்டு உமிழும் ஆய்வாகவும், மற்ற ஆராய்ச்சியாளர் களுக்குத் தேவையான நுட்பங்களாகவும் இருந்தன.

இருந்தபோதிலும், இராண்ட்ஜெனின் ஆழ்ந்த முக்கியத்துவ உணர்வுகளை யாரும் அதிகப்படியானது - வரம்பு மீறியது என்று எண்ண மாட்டார்கள். எனவே, எக்ஸ்-ரே கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகத்திற்கு மிக உபயோககரமானதாக அமைந்திருந்தது.

ஊடுகதிர் நிழற்படக் கருவிக் கண்டுபிடிப்பு, அறிவியல் கருத்துக் கோட்பாட்டிற்கு அடிப்படையானது. மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்று மருத்துவ உலகம் பாராட்டுமளவிற்கு எக்ஸ்-ரே உபயோகம் உள்ளதை மக்கள் உணர்ந்து மகிழ்வதைப் பார்க்கிறோம்.

எக்ஸ்-ரே கருவியைக் கண்டுபிடித்து மருத்துவ உலகுக்கு அறிவுக் கொடையாக வழங்கிய இராண்ட்ஜென், இயற்பியற் துறைக்குரிய உலக நோபல் பரிசை 1901-ஆம் ஆண்டில் பெற்றார்.

மனித வாழ்க்கைக்குரிய அற்புத உயிர் காக்கும் கருவியை மருத்துவ துறைக்கு வழங்கிய மாமனிதர் கோனார்டு இராண்டஜென், ஜெர்மனியிலுள்ள மியூனிச் நகரில் 1923-ஆம் ஆண்டில் காலம் ஆனார்.