பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 46 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

இந்த விஞ்ஞான உடைப்புச் செயலுக்கு முன்பு, வியாழன் கோளுக்கு விண்கலம் சென்றுள்ளது. செவ்வாய் கோளுக்கு ரோவர்ஸ் என்பதும் சென்றது. ஆனால், அவற்றை எல்லாம்விட இப்போது சென்ற "டீப் இம்பாக்ட் விண்கலம்தான் செயற்கரிய செயல்களைச் செய்து மோதலில் வெற்றி கண்டது.

இந்த டீப் இம்பாக்ட் விண்கலம் மணிக்கு 23,000 மைல் தூர வேகத்தோடு விண்ணில் பறந்தது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த விண்கலம் சென்று மோதி உடைத்ததே ஒரு பெரிய வெற்றி என்று அறிவியல் உலகம் மகிழ்வடைந்தது.

கோள்களுக்கு விண்கலங்களை அனுப்புவது சுலபமாகத் தெரியலாம். ஏனென்றால், அவை அளவில் மிகப் பெரியவை. ஆனால், வால் நட்சத்திரங்கள் அளவில் சிறியவை. அதனால் அவற்றை அவ்வளவு சுலபமாக உற்று நோக்கிக் கவனிக்க முடியாது. அதனைப் போலவே அவற்றின் சுற்றுப் பாதையைக் கணக்கிடுவதும் சிரமம்.

இந்திய விஞ்ஞானி ஷ்யாம் பாஸ்கரனுடன், கேயூர் படேல், ராம்பட் என்ற இந்திய விஞ்ஞானிகளும் உடன் சென்றார்கள்.

இந்திய விஞ்ஞானி பாஸ்கரன், அமெரிக்காவில் பிறந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அவருடை தந்தை டெக்சாஸ் ஏ-அண்டு-எம் என்ற பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பாஸ்கரன் ஏரோஸ் பேஸ் என்ற பொறியாளர் துறையில் பட்டம் பெற்றவர். டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் முது அறிவியல் பட்டமும், கொலராடோ பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்ற வாலிபர். இவர் நாசா அணுவியல் சோதனைக் கூடத்தில் 1992-ஆம் ஆண்டில் பணியில் நியமனமானார்.

வால் நட்சத்திரத்தை முதன் முதலில் மோதி உடைத்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி என்று எண்ணும்போது நமக்கெலாம் பெருமை ധാഖ??