பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

இளைஞர் கல்விமுறையில் இ | மாண்டிசோரி செய்த மாற்றம்

சிறுவர்களே! சிறுமிகளே!

Hடத்தில் நீங்கள் பார்க்கும் அம்மையார் பெயர் மரியா மாண்டிசோரி. இவர் இத்தாலி நாட்டில் பிறந்த சிறந்த கல்வி நிபுணி.

கல்வித் துறைப் பணிக்காக அமெரிக்கா, செர்மனி, பிரான்சு, இங்கிலாந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்று, பல கல்விக் குழு மேதைகளுடன் சிறுவர் கல்வி பாடப் போதனையைப் பற்றி அவர் வாதிட்டு விளக்கம் பெற்றவர்.

இதனால், மாண்டிசோரி என்ற கல்வி முறையை இளைஞர் களுக்காக, சிறு மழலையர்களுக்காக இவர்தான் உருவாக்கினார்.

மாண்டிசோரி கல்வி திட்டம் என்றால் என்ன தெரியுமா? ஆங்கிலப் பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாட போதனை முறைகளில் சில புதிய யுக்திகளை உண்டாக்குவதுதான் மாண்டிசோரி கல்வியாகும்.

சிறு மழலையர்களுக்கு எளியமுறையில், விளையாட்டு நிகழ்ச்சிகளைப் போல - அவர்களை ஆட வைத்தும், பாட வைத்தும், பேச வைத்தும் சில மாற்றங்களை அங்குக் குழந்தைகளிடையே செய்தும் காட்டினால், குழந்தைகள் மனம் உற்சாகமாகவே எப்போதும் இருக்கும் என்று மாண்டெசோரி நம்பினார்.

சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் கலை இன்பத்தை ஆடல் பாடல்கள் வாயிலாக மாண்டிசோரி உருவாக்கினார்.

அந்தப் பழக்க வழக்கப் பண்புகளால் மழலைகள் தானாகவே உற்சாகமாக ஆட, பாட ஆரம்பித்தன. அதனால், குழந்தைகள் மனம் புதுவிதமான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுகின்றன.