பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 7

1926-ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் கூட்டு நிறுவனமாக இணைந்து டாய்ம்லர் பென்ஸ், பென்ஸ் டாய்ம்லர் என்ற பெயர்களோடு கார்களைத் தயாரித்தார்கள்.

இவ்வாறாக, ஆண்டாண்டுகளாக கார்கள் தயார் செய்வதில் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று வேகத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்தன. அந்தந்த நிறுவனக் கார்களும் மக்களிடம் செல்வாக்கோடு விற்பனையாயின.

பிரெஞ்சு நாட்டுக் கார் தயாரிப்பாளர்கள் சில மோட்டார் கார் எஞ்சின்களை, மக்கள் உட்காரும் இருக்கைகளுக்கு (Seat) அடியிலும், வேறு சில கார்களில் கார்களின் முன்பாகத்தில் இஞ்சினைப் பாதுகாப்பதற்கான மேல் சரிவாக (Mounted)வும், கார்களை இயக்கும் உறுப்புக்களை நிறுத்தவும் - இயக்கவும் கூடிய க்ளட் (Clutch)சையும், கார் சக்கரங்களை இயக்கும் நெம்புகோல் சக்தியான கியர்சையும் (Gears) பொருத்தி, பிரெஞ்சு மோட்டார் சைக்கிளை ஆர்மாண்டு பெக்குவாட் என்பவர் 1891-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து ஒட்டிக் காட்டி மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதே பிரெஞ்சு நாட்டுக்காரரான மற்றொரு பொறியாளர் ரெனால்ட் என்பவர்; 1800-ஆம் ஆண்டில் தானாகவே இயங்கக் கூடிய ஆற்றலோடு ஒரு காரைக் கண்டுபிடித்து உலகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.

இத்தாலி நாட்டில் 1899-ஆம் ஆண்டில் ஃபியட் (Fiat) என்ற கார் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் - இத்தாலி விஞ்ஞானிகளுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை, சார்லஸ், பிராங்க் டுரியா என்ற சகோதரர்கள் கேஸ் (Gas) ஆற்றலால் இயங்கும் கார்களை 1893-1894-ஆம் ஆண்டுகளின் இடையில் கண்டுபிடித்தார்கள்.

இவற்றுக்கெல்லாம் பிறகு, அமெரிக்க மோட்டார் மன்னன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட ஹென்றி ஃபோர்டு என்பவர். சக்திவாய்ந்த எஞ்சின்களைப் பயன்படுத்திக் காரையும், மோட்டார் சைக்கிளையும் தயார் செய்தார். அந்தத் தொழிற்சாலைக்கு ஃபோர்டு மோட்டார் நிறுவனம் என்று அவர் 1893-ஆம் ஆண்டில் பெயரிட்டார்.

தொழிலதிபர் ஃபோர்டு நிறுவனம்; முதன் முதலாக 'A' மாடல் என்ற ஒரு தானியங்கி மோட்டார் காரை 1903-ஆம் ஆண்டில் செய்து விற்பனைக்கு அனுப்பியது. இதனைப் போலவே தொடர்ந்து சில ஆண்டுகளில் இங்கிலிஷ் மொழி நெடுங்கணக்குப் பெயரில் பல கார்களைத் தயார் செய்து உலக விற்பனைக்காக ஃபோர்டு அனுப்பினார்.