பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமஸ் எடிசன் அறிவியல் அற்புதங்கள்!

| தாமஸ் ஆல்வாய் எடிசன்

மாணவ - மணிகளே!

அமெரிக்க அறிவியல் துறை கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வாய் எடிசன் மட்டும் பிறவாமல் இருந்திருந்தால், இந்த உலகம் என்ன கதிக்குப் பலியாகி இருக்குமோ என்பதை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுபோலவே நமது நாகரிகம் என்ன நிலைக்குச் சீரழிந்திருக்குமோ.....! சிந்திக்கவே முடியவில்லை.

எடிசன் எண்ணற்ற விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கிடப்பதே அவருக்குப் பழக்கமானதால், எப்போதும் அவர் ஏதாவது ஒரு கற்பனை உலகிலேயே மிதந்துக் கிடப்பார்.

ஐந்து வயது சிறுவனாக எடிசன் இருக்கும்போது, அவரது வீட்டுக்குப் பின்புறமுள்ள பண்ணை வீட்டில் பற்றி கொண்ட தீயில், அவர் சிக்கிக் கொண்டு திணறி எப்படியோ தப்பித்துக் கொண்டார்.

ஒருவேளை அந்த நெருப்பு எடிசனைக் கோரமாகப் பற்றிக் கொண்டிருந்தால் அவர் கதி என்ன? போகட்டும், இந்த உலகமே சுனாமிப் பேரலைகளது அசுரப் பசிக்குப் பலியாகி இருக்காதா - மாணவ மணிகளே? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்

அந்த எரி நெருப்பு ஆபத்திலே இருந்து தப்பிப் பிழைத்த எடிசன் "இன்கன்டெசெண்ட் பல்ப் என்கிற வெப்பத்தோடு வெண்சுடர் ஒளிவீசும் பளபளப்பாக எரிகின்ற (Incandescent Bulb) மின்விளக்கின் எரியும் குமிழ்ப் பகுதியைக் கண்டுபிடித்தார். அந்த பல்ப்தான் இன்று உலகையே ஒளியுலகமாக்கிக் கொண்டு இயக்குகின்றது. என்ன மாணவ மணிகளே! நான் கூறுவது தவறா?

இதற்கோர் எடுத்துக்காட்டும் அவரது தொழிற்சாலைத் திடலில் நடந்தது. அதையும் கேளுங்கள்.