பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். பா. நடராஜனின்

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை !

மாணவ - மணிகளே

கணிதம் கற்கும் மாணவர்கள் சற்றுத் திறமையானவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாருமே இராமானுஜன்களாக, எஸ்.எஸ்.பிள்ளைகளாக கணிதப் புகழ்வானின் மீன்களாக ஒளிர முடியாது.

இருந்தாலும், கணிதம் என்றால் காதவழி ஒடும் மாணவர்களும் இருக்கின்றார்கள் அல்லவா? அத்தகையவர்களுக்கு இந்த கணித வகைக் குறிப்புகள் ஒரு சிறு துண்டுகோலாகவும், ஊக்க ஊன்றுகோலாகவும் விளங்கக் கூடும். படித்துப் பாருங்கள் - சற்றுப் பொறுமையாக!

கணிதம், கணக்கியல், எண்ணியல் என்றெல்லாம் கணிதத்தை நாம் குறிப்பிடுகின்றோம். எண்கள் இல்லாமல் கணக்குத் துறையில்லை.

பண்டையத் தமிழ் இனத்திற்கென்று ஒர் எண் அமைப்பு இருந்தது. அவை இவை க = ஒன்று, உ - இரண்டு, ங் - மூன்று, ' நான்கு, ரு = ஐந்து, கூ = ஆறு, எ ஏழு, அ = எட்டு, கூ= ஒன்பது, க0 = பத்து என்பவை:

ஆதியிலே உலகின் ஒரு மொழியாய் இருந்த தமிழ், பாதியில்ே இரு மொழிகளில் ஒன்றாய் திகழ்ந்த தமிழ், இன்று இந்திய பதினான்கு மொழிகளிலே ஒன்றாக உள்ளத் தமிழ் மொழிக்குச் சொந்தமான மேற்கண்ட எண்ணியல் துறையினையே நெடுங்கணக்கு என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். இன்றும் நாம், அதை எழுதிப் படித்தும் வருகின்றோம்!

ஆனால், தற்காலக் கல்விமுறையில் மேற்குறிப்பிட்ட நெடுங்கணக்கு முறை சேர்க்கப்படவில்லை. காரணம், இன்றைய ஆட்சியில் இருப்பவர்களே அந்த எண்ணியல் முறையைப் படித்தவர்கள் அல்லர் என்பதுதானே!