பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

CA; CUí US தமிழ்ச் சொல்லே :

ஆனால், கற்களைக் கொண்டு வந்து தகரப் பெட்டியில் குழுவாகக் கொட்டி வண்டிச் சக்கர உருளளவுச் சுற்றுக்களால் வண்டி ஓடிய தூர அளவைக் கணக்கிடும் முறை இன்றைய ஆட்டோ கண்டுபிடிப்பாளர்க்கு முன்பே இருந்தது என்பதே உண்மை.

அந்தத் துரத்தைக் கணக்கிட உதவிய கருவி இன்றைய விஞ்ஞானமன்று கூழாங்கற்கள். அந்தக் கூழாங் கற்களைத் தகரப் பெட்டியில் குழுவாகக் கொட்டித் தூர அளவு கணக்கிடப்பட்டதால், அந்தக் கருவிக்கு கல்குழு என்ற தமிழ்ப் பெயர் வந்தது.

Cal-கல், Culu - குழு என்பது, Calculus என்றாயிற்று. அந்த லத்தீன் மொழிச் சொல்லுக்கு தமிழ் வடிவம் கொடுத்த அந்தச் சொல்லாய்வாளரின் பெயரும் அந்தப் புத்தகமும் மறதியாகி விட்டது. ஆனால், அவரது தமிழார்வக் கண்டுபிடிப்பை நம்மால் மறக்க முடியவில்லை.

காரணம், தமிழ்ச் சொல்லாய்வு அல்லவா? நினைவில் நின்ற அந்தக் கருத்தை - மாணவர்களே உங்களோடு பகிர்ந்து கொண்டேன்! எல்லாம் ஆசைதானே!

திரிகோன கணித முறை

இப்போது கணித வரலாற்றுக்கு வருவோம். நுண்கணிதம் போலவே, வானளாவி உயர்ந்த பொருள்களின் உயரங்களையும், மிக நீளமான பொருட்களையும் கணக்கிட உதவுவது திரிகோண கணிதம். இதை ஆங்கிலத்தில் Trigono metry என்பார்கள் கணித வல்லார்.

வானவியல் கணிதம்

விண்ணில் உள்ள கோள்களைப் பற்றி ஆராய வானியல் வித்தகர்கள் மிக முயன்று சில நுட்பங்களைக் கண்டு கூறி இருக்கிறார்கள். இந்தக் கணிதம் வானவியல் எனப்படும். ஆங்கிலத்தில் Astronomy (அஸ்ட்ரோநமி) எனப்படும்.

பொறியியல், இயற்பியல், வேதியியல் மற்றும் சில அறிவியல் துறைகளின் நுட்பங்கள் அவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை யக உள்ளன. இதனால்தான் "கணிதவியலை அறிவியல் துறைகளின் அரசி' என்று விஞ்ஞான உலகம் வியந்து கூறுகின்றது. -