பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணத்தை மறுத்த உலக இலட்சிய மேதைகள்:

மாணவ - மணிகளே!

நீங்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த மேதைகள் வாழ்க்கையை நாம் உங்களுக்குச் சுட்டிக் காட்டவில்லை. தாராளமாக நீங்கள் மணவாழ்க்கையில் ஈடுபடலாம்; ஈடுபட வேண்டும்! சம்சார சாகரத்தின் ஆழத்தை அடையாளம் காண்பதிலே தவறேதும் இல்லை.

வாழ்க்கையிலே ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளை, இலட்சியத்தைத் திட்டமிட்டு வரையறுத்துக் கொண்டு, அந்தச் சாதனையை அடைவதற்காகச் சிலர் தங்களது உடல், உயிர், பொருள் அனைத்தையும் தியாகம் செய்து, தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு மனநிறைவு பெற்று மரணமடைந்துள்ளாகள்!

அறிவில்லாதவர்களா அவர்கள்? சிறந்த மேதைகள் ஏனோ இப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டு, கருமமே கண்ணாக இருந்து வெற்றி யும் பெற்று உலக சாதனையாளர்களாக வரலாற்றில் உலா வருகிறார்கள். அந்த விவரங்களை நீங்களும் புரிந்து கொண்டால் அந்த லட்சியத்தை மறுப்பதா? மறப்பதா? ஏற்பதா? என்ற முடிவுக்கு நீங்கள் வர உதவியாக அமையுமல்லவா? இதோ அவை :

இமானுவேல் காண்ட் : ஒரு சிறந்த தத்துவஞானி. அவர் திருமணம் செய்து கொள்ள இரண்டு முறை முயற்சி எடுத்தார். என்ன காரணத்தாலோ அந்த முயற்சிகள் தாமதப்பட்டு விட்டன. அதே நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாள். மற்றொரு பெண் அவரிடம் உண்டான மனக் கசப்பால் அவரை விட்டே விலகிப் போய் விட்டாள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

இமானுவேல் காண்ட் எந்த ஒரு முடிவையும் ஒரு காரணமான நேரக்கத்தோடு சரியான நேரத்தோடு எடுப்பதில்லையாம்!

"ரோம் சாம்ராச்சியத்தின் வீழ்ச்சியும் -அழிவும்" என்ற நூலை எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் எட்வர்டு கிப்பன். அவர் ஒரு மதப் பிரச்சாரம் செய்யும் கிறித்துவப் பாதிரி ஒருவர் மகளின் காதலிலே வீழ்ந்தார்.