பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2售鲁 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

ஜெர்மன் நாட்டில் புகழ் பெற்ற நாவல்களை எழுதிய கொதே; சிறந்த கவிஞர். நாடகம் எழுதும் திறமை பெற்றவர். அவர் Faust என்ற தனது இலக்கியத்தை 83-வது வயதிலே தான் எழுதி முடித்தார்.

டைட்டன் என்பவர் இத்தாலி வண்ண மறுமலர்ச்சி ஓவியக் கலைஞர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டவர்.

இவர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு மறுமலர்ச்சிப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பண்பாட்டு மறுமலர்ச்சி நடவடிக்கைகளில், டைட்டன் புத்துணர்ச்சியூட்டும் மக்கள் பெயிண்டராகத் தனது 99-தாவது வயது வரைப் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி நாட்டு வண்ண ஓவியக் கலைஞர் மைக்கேல் ஆஞ்சலோ என்ற பெயிண்டர். இவர் கல்லோவியச் சிற்பக் கலைஞரும் கூட. இவர் அருமையான, அற்புதமான தனது சிற்ப ஓவிய வேலைப் பாடுகளை 60-ஆம் வயது முதல் 70-தாவது வயது வரை செய்துப் புகழ் பெற்றவர்.

அமெரிக்க அரசியல் விற்பன்னரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தனது தாய் நாடான அமெரிக்க அரசியல் விடுதலைப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் பிரதிநிதியாக, ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றது 78-வது வயதில்! அவர் தனது வாழ்க்கை வரலாற்றை 80-வது வயதில் எழுதி முடித்தார்; சாகும்வரை பத்திரிகையாளராகவே வாழ்ந்தார்.

கிரேக்க நாட்டின் நாடகப் பேராசிரியர் சோபோக்லிஸ், தனது 'ஒடிபஸ் என்ற நாடகத்தை 90-வது வயதில்தான் எழுதினார்.

அமெரிக்க மோட்டார் மன்னன் என்று உலகத்தவரால் போற்றப்படுபவர் ஹென்றி ஃபோர்டு, அமெரிக்க நாட்டின் 34-வது குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த டிவைட் டி. ஐசனோவர், இரண்டாவது உலகப் போரில் இராணுவப் பிரிவின் படைக்குத் தலைவராகவும் இருந்தவர். எனவே ஃபோர்டும் - ஐசனோவரும் 60-வது வயதிலேதான் தங்களது இந்த அரும் சாதனைகளைத் தாய்நாட்டுக்காக ஆற்றினார்கள்.

பிரிட்டிஷ் நாட்டின் பிரதமராக 33-வது வயதில் பொறுப்பேற்றவர் கிளாடு ஸ்டோன் என்பவர். சிறந்த ராஜதந்திரி.

இத்தாலி நாட்டுச் சிற்பியும், வண்ண ஓவியருமான லியோனார்டோ டாவின்சி தனது 77-வது வயதில்தான் தனது பெரும் பான்மையான சிற்பங்களையும் ஒவியங்களையும் எழுதி முடித்தார்.