பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் தெய்வ மொழி : கூறியவர் சீகன் பால்க்!

மாணவ மணிகளே....!

HMü#Gs|Gsoriousiv stseit unáš (Bartholomaeus Zegenbalg) என்பவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புரோட்டெஸ்டெண்ட் மத குரு. அவர் தனது மதப் பிரசாரத்திற்காக உல்க நாடுகளைச் சுற்றி வந்தவர்.

இந்தியாவுக்கும் அவர் வருகை தந்தார். தமிழ்நாட்டு வங்கக் கடலோரம் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரிலே அவர் தங்கித் தனது மதப் பிரச்சாரத்தைச் செய்து வந்தபோது, பால்க் அங்கே ஓர் அச்சகத்தை ஏற்படுத்தினார். அடிக்கடி அவர் ஜெர்மன் செல்வதும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவதும்தான் அவர் தொழிலாக அமைந்தது.

தமிழ் நாட்டில் தமிழைக் கற்று, தமிழை ஆராய்ச்சி நடத்தும்போது, தமிழ் சம்பந்தப்பட்ட இலக்கியச் சான்றுகளை எல்லாம் அரும்பாடுபட்டு பால்க் சேகரித்தார்.

தமிழ் மொழியைப் பற்றிய இலக்கணங்களைப் படித்ததின் ஆர்வமாக, சீகன் பால்க் இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தை எழுதினார்.

அந்தப் புத்தகத்திற்கு கிரமேட்டிகா தமுலிகா (Grammatica Damulica) என்று அவர் பெயர் வைத்தார். அந்தப் புத்தகம் ஜெர்மனியில் உள்ள ஹேலி (Hale என்ற ஊரில் 1716-ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரம் செய்ய வரும் மேல்நாட்டு மத குருக்கள் சுலபமாகத் தமிழைக்கற்றிட இந்த நூல் பெரிதும் பயன்பட்டது.

அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஜெர்மனியில் உள்ள காண்டர்ஸ்பரி என்ற நகர மேயர் தலைமையில் நடைபெற்றது.