பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றோரிடம் பட்ட அவமானம்; டார்வினுக்குப் புகழ் தந்தது:

ត្សា Lអំនាំអៃ

மாணவ - மணிகளே!

சிார்லஸ் டார்வின் இளைஞராக இருந்தபோதும், அவர் பள்ளியில் கல்வி பயிலும்போதும் மந்தமான குணமுடையவராகவும், கல்வியில் எல்லா மாணவர்களை விடப் பிற்பட்டத் தகுதியுடையவராகவும் இருந்தார்.

அதனால் கோபமடைந்த அவரது தந்தையார், “நீ நாய்களைச் சுடுவதற்கும், எலிகளை விரட்டி விரட்டிப் பிடிப்பதற்கும்தான் லாயக்குடையவனே தவிர, கல்வியில் அக்கறையுடையவனாக இல்லை. இவ்வாறு நீ இருப்பது உனக்கு மட்டுமன்று அவமானம்; இந்தக் குடும்பத்துக்கே பெரிய அவமானம்" என்றார்.

தந்தை வாக்குக்கு ஏற்றவாறு டார்வின் இலண்டன் எடின்பர்க் பல்கலைக் கழக மருத்துவப் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தார். அன்று முதல் அவர் மன ஊக்கம் பெற்ற மாணவனாக, எல்லாப் பாடங்களிலும் சுறுசுறுப்பாக, ஆர்வம் மோதும் ஆர்பரிப்பாளராக, ஒவ்வொரு பாடத்தின் தேர்விலும் பெரும் வெற்றி பெற்று, தனது இலட்சியத் துறையான இயற்கைக் கோட்பாடுகளையும், பண்பாடுகளை யும் ஆராய்ச்சிச் செய்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பட்டங்களை 1831-ஆம் ஆண்டில் பெற்று அரிய மேதையாக விளங்கினார்.

இயற்கையை ஆராயும் வரலாற்றில் அவர் முதல் தர மாணவராகத் தேர்வுப் பெற்றவுடன், கடற்பயணங்களில் அக்கறை செலுத்திஇயற்கைப் பொருட்களை, மிருகங்களை, பறவைகளை, செடிகொடி மர வளர்ச்சிகளின் நுட்பங்களை எல்லாம் ஆராய்ந்து, புதியன கண்டுபிடிக்கும் மாபெரும் விஞ்ஞானியாக மாறினார். அவருடைய இலட்சியமான உயிரியல் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானத்தின் குறிக்கோளில் வெற்றியும் பெற்றார்.

மாணவ, மாணவிகளே! பெற்றோரிடம் டார்வின் அனுபவித்த அவமானம் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கும் ஒரு பாடம் அல்லவா?